பூனேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூனேவ சந்திக்கு அருகில் வெடிபொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூனேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூனேவ சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் குழு நேற்று (13) இரவு சோதனையிட்டுள்ளது.
கைதான சந்தேகநபரிடமிருந்து சேவை நூல், 150 கிராம் அம்மோனியம் மற்றும் 1 ஜெலக்னைட் குச்சிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.