பிரபல தபேலா மேதை சாகிர் ஹுசைன் இன்று காலமானார்

இந்தியாவின் பிரபல தபேலா இசைமேதை சாகிர் ஹுசைன் அமெரிக்காவில் காலமானார்.

இந்தியாவைச் சேர்ந்த சர்வதேசப் பிரபலம் வாய்ந்த தபேலா இசை மேதையான சாகிர் ஹுசைன் (73) நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளுக்காக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அமெரிக்காவில் வசித்து வந்த சாகிர் ஹுசைன் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். Idiopathic pulmonary fibrosis (IPF) எனப்படும் நுரையீரல் உட்சுவர்களில் ஏற்படும் இந்தச் சிக்கலால் அவர் சுவாசிப்பதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுவந்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும், நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாகிர் ஹுசைன் இன்று காலைப் பொழுதில் காலமானதாகத் தெரியவருகிறது.

சாகிர் ஹுசைனின் இழப்புக் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல பிரபலங்களும் தமது இரங்கலையும் அவருடனான நினைவுகளையும் பகிர்ந்துவருகின்றனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply