மும்பை அருகே ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம்(18) மாலை 3.55க்கு, கேட்வே ஆஃப் இந்தியாவில் இருந்து எலெபன்டாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது நீல்கமல் என்ற பயணிகள் படகு.
அப்போது எதிரே வந்த இந்திய கடற்படையின் படகு நீல்கமலில் மோதி விபத்துக்குள்ளானதுடன் இந்த விபத்தில் ஏழு ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பிபிசி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.