பொலன்னறுவை, மங்களகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நுவரகல வனப்பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக மங்களகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மங்களகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மங்களகம பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மங்களகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.