மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 546 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 72 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply