சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

இன்று (25) மாலை தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

ஸ்ரீ விசுத்தாராம லுனாவ விகாரையின் பெரஹெர ஊர்வலம் நடைபெறுவதால் வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுனாவ மகா விகாரையின் 71ஆவது வருடாந்த மங்கள பெரஹெர நிகழ்வின் வீதி ஊர்வலம் இன்று (25) மாலை 06.00 மணி முதல் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வினைக் காண பெருமளவிலான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதோடு இதனால் விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேற்படி பெரஹெர ஶ்ரீ விசுத்தாராம விகாரையில் இருந்து புறப்பட்டு, இங்கிரம சந்தி, சத்தர்ம மாவத்தை, கெத்தாராம வீதி, அடி 100 வீதி, பேஸ்லைன் வீதி, ஒருகொடவத்தை சந்தி, ஸ்டேஸ் வீதி, பலாமரச் சந்தி, கிரான்ட்பாஸ் வீதி, இங்குருகடே சந்தி, எப்ரோச் வீதி, பண்டாரநாயக்க சந்தி, பேஸ்லைன் வீதி, ஒருகொடவத்தை சந்தியின் ஊடாக மீண்டும் விகாரைக்கு வருகைத்தரும்.

எனவே, பெரஹெர பயணத்தின் போது சாரதிகள் மற்றும் பொதுமக்கள் பின்வரும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply