எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாபெல்லஸ்ஸ பகுதியில் எம்பிலிபிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5,000 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எம்பிலிபிட்டிய, கும்பகொட ஆரா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.