ரஸ்யாவின் ஏவுகணைகளே அஜர்பைஜான் விமானவிபத்திற்கு காரணம் என உக்ரைன் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பக்குவிலிருந்து குரொஸ்னிக்கு பயணித்துக்கொண்டிருந்த அஜர்பைஜான் எயர்லைன்சின் எம்பிரேர் 190 விமானம் ரஸ்யாவின் பாதுகாப்பு பொறிமுறையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என போலித்தகவல்களை கையாள்வதற்கான உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பேரவை நிலையத்தின் தலைவர் ஆன்ரி கோவெலென்கோ தெரிவித்துள்ளார்.
அவர் விமானத்திற்குள் காணப்பட்ட காட்சிகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளதுடன் விமானத்தின் உள்ளே உயிர்காக்கும் அங்கிகள் துளையிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன. இதேவேளை உக்ரைனின் ஆளில்லா விமானம் என கருதி ரஸ்யாவின் ஏவுகணைகள் அஜர்பைஜான் விமானத்தை தாக்கியிருக்கலாம் என ரஸ்ய ஊடகங்களிலும் ஊகங்கள் வெளியாகியுள்ளன.
கஜகஸ்தானில் 69 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியதில் 38 பேர் உயிரிழந்துள்னர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அஜர்பைஜான் எயர்லைன்சிற்கு சொந்தமான விமானம் அகாட்டு நகரில் அவசரமாக தரையிறங்க முற்பட்டவேளை தீப்பிடித்தது.