கொரோனா வைரஸை ரெம்டெசிவிர் மருந்து கட்டுப்படுத்துவதாக கலிபோர்னியாவில் உள்ள கிலியட் என்ற மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா நோயாளிகளுக்கு வைரஸூக்கு எதிரான ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டதில் நல்ல பலன் கிடைத்தது.
முதல் ஐந்து நாட்கள் ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டது. இரண்டு வாரங்களில் பாதி பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ரெம்டெசிவிர் மருந்தின் மூன்றாவது பரிசோதனைதான் இறுதியானது.
மருந்துக்கான அனுமதி பெறுவதற்கான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.