
ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் இரண்டினை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிமன்ற நீதவான் நேற்று (26) உத்தரவிட்டுள்ளார்.
16 வயதுடைய பாடசாலை மாணவனும் 21 வயதுடைய இளைஞனுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் அநுராதபுரம் – தந்திரிமலை நகரில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் நேற்றைய தினம் ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் இரண்டை மாற்ற முயன்றுள்ள நிலையில் சந்தேக நபர்கள் வைத்திருந்த நாணயத்தாள்கள் தொடர்பில் சந்தேகமடைந்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தந்திரிமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.