அநுராதபுரம், ஹபரணை, ஹிரிவட்டுன்ன பிரதேசத்தில் வேன் ஒன்றும் கார் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, காரில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.