இரத்தினபுரி, குருவிட்ட நகரத்தில் குருகங்கைக்கு அருகில் நேற்று (26) பிற்பகல் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.