
பிரபல பாதாள உலகக்குழு தலைவரான கனேமுள்ள சஞ்ஜீவ என்பவர் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போதே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான “கணேமுல்ல சஞ்சீவ” சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியது.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர், வழக்கறிஞர் போல் நடித்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும், துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டார், மேலும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பூசா சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த “கணேமுல்ல சஞ்சீவ” இன்று (19) காலை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.