மாலியில் இராணுவ புரட்சி ஏற்பட்டதையடுத்து அந்நாட்டு ஜனாதிபதி இப்ராகிம் பவுபக்கர் கெய்டா ( Ibrahim Boubacar Keïta ) , பிரதமர் மெய்கா பவ்வ் சிஸ்சே ( Soumeylou Boubèye Maïga ) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் அந் நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக அண்மைக் காலமாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இராணுவத்தில் பணியாற்றி வந்தவர்கள் திடீரென கிளர்ச்சியாளர்களாக மாறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
அந்த வகையில் அந் நாட்டு ஜனாதிபதியான இப்ராகிம் பவுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசின் கட்டுப்பாட்டை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால், மாலியில் இராணுவம் ஆட்சியை பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.