கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை நெருங்கும் நிலையில் இந்தியா தற்போது காணப்படுகின்றது.
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக அடையாளம் காணப்பட்டோர், குணமடைந்தோர், உயிரிழந்தோர் நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, புதிதாக 69,878 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனூடாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29,75,701 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், குறித்த வைரஸ் தொற்றினால் புதிதாக 945 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 55,794 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 63,631 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தொற்றில் இருந்து குணமடைதோர் எண்ணிக்கை 22,22,577 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 6,97,330 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கமைய கொரோனாவால் உயிரிழந்தோர் விகிதம் 1.89 விகிதமாகவும் குணமடைந்தோர் விகிதம் 74.30 விகிதமாகவும் சிகிச்சை பெறுவோர் 23.43 விகிதமாகவும் காணப்படுகின்றது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.