இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 522 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலின் அடிப்படையில் மார்ச் மாதம் 31 ம் திகதி 143 ஆக இருந்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி 665 ஆக உயர்வடைந்துள்ளது. இதனடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 522 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரையான காலகட்டத்தில் அதிகபட்சமான கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாளாக ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி அமைந்துள்ளது. அன்று 65 பேர் புதிதாக இனங்காணப்பட்டிருந்தனர்.
ஏப்ரல் மாத்தில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் இனம் காணப்படாத நாளாக ஏப்ரல் 16ஆம் திகதி அமைந்துள்ளது. அதேபான்று கொரோனா தொற்று ஏற்பட்ட இலங்கையர் ஒருவர் இனம் காணப்பட்ட மார்ச் மாதம் 11 முதல் இதுவரை மூன்று நாட்கள் மட்டுமே எந்தவொரு நபருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படாத நாளாக அமைந்துள்ளது.
மார்ச் மாதத்தின் 25 மற்றும் 27 ஆகிய இரு நாட்களிலும் ஏப்ரல் 16 ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே எந்தவொரு கொரோனா தொற்றாளரும் இலங்கையில் கண்டறியப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.