விடுதலைப்புலிகளால் புதைத்துவைக்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள வீதி ஓரத்தில் போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் இடம் ஒன்று இன்று பொலீசாரால் தோண்டப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இகசிய தகவலுக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த பகுதி இன்று காலை சிறப்பு அதிரடிப்படையினரால் பைக்கோ இயந்திரம்கொண்டு தோண்டப்பட்டுள்ளது.

இதன்போது போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்ட மூன்று ஆர்.பி.ஜி. எறிகணைகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

எடுக்கப்பட்ட வெடிபொருட்கள் சிறப்பு அதிரடிப்படையினரால் தகர்த்து அழிக்கப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

You May Also Like

About the Author: kalaikkathir