ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது

 

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை சேனை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த 26 வயதுடைய முகம்மது சப்ரான் என தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 30 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ண்ணியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir