பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விடுத்திருக்கும் அழைப்பை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 93 பேர் புறக்கணித்துள்ளதாக தெரியவருகின்றது.
பழைய பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அலரிமாளிகையில், நாளை (04) காலை 10 மணிக்கு முக்கிய கூட்டமொன்றை நடத்துவதற்கான அழைப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்திருந்தார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் 127 உறுப்பினர்களில் 93 பேர் அந்த கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கீழுள்ள 87 உறுப்பினர்கள், ஜே.வி.பியின் 6 உறுப்பினர்கள் ஆகியோரே இதில் பங்கேற்க மாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அக்கட்சியின் உறுப்பினர்கள 19 பேரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள்15 பேரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.