கேப்பாபுலவு விமானப்படைத்தளத்தில் உள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்தவர்களின் இதுவரை 100 பேரின் மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்று குறித்து கண்டறிய எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சுகந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை,குணசிங்கபுர,அவிசாவளை போன்ற பகுதிகளில் இருந்து 257 பேர் கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள்.
இவர்களின் மாதிரிகள் 03.05.2020 அன்று தொடக்கம் கட்டம் கட்டமாக எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின் றன என்றும்.
முதற்கட்டமாக 100 பேரின் மாதிரிகள் இதுவரை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,நாளை மற்றும் நாளை மறுநாட்களில் அங்குள்ள அனைவரின் மாதிரிகளும் கட்டம் கட்டமாக எடுக்கப்பட்டு பெறுபேறுகள் அறிவிக்கப்படும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.