அலுவலக பணியாளர்களுக்கு வசதியாக ரயில் சேவை!

கொழும்பு கோட்டையிலிருந்து அத்தியாவசிய சேவைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவைகள் வரும் மே11 (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளன என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அரச மற்றும் தனியார் துறை அலுவலகப் பணியாளர்கள் கொழும்புக்கு வருகை தருவதற்கு வசதியாக இந்த தொடருந்து சேவைகள் இடம்பெறும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அம்புக்குறிகளால் அடையாளமிடப்பட்ட ஆசன ஒழுங்கில் மட்டுமே பயணம் செய்வோர் அமர அனுமதிக்கப்படுவர்

ஆசன முற்பதிவுகளை திணைக்கள அல்லது நிறுவனத் தலைவர்கள் ஊடக மேற்கொள்ளுமாறு ரயில்வே திணைக்களம் கேட்டுள்ளது.

அதன்போது பயணத்தை மேற்கொள்ள உள்ளவரின் அலைபேசி இலக்கத்தை குறிப்பிடவேண்டும். அந்த இலக்கத்துக்கு வரும் குறுந்தகவலை (எஸ்.எம்.எஸ்) காண்பித்து ஆசனங்களில் அமர முடியும் என்றும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பயணம் செய்பவர் ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேணுவதையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் கோரப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir