கொரோனா வைரஸ் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள ஊரடங்கை எதிர்வரும் 11ஆம் திங்கட்கிழமை கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் தளர்க்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணித்துள்ளார்.
கொரோனா அபாய வலயங்களாகக் கருதப்படும் மாவட்டங்களில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய மக்கள் செயற்படவேண்டும் எனவும், அதற்கான வேலைத்திட்டங்களை சுகாதார அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் சுகாதார அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்றும் இன்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நடத்திய பேச்சுகளின்போதும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.