தொழிற்சாலை விசவாயு கசிவால் 8 பேர் பலி ; பலர் வைத்தியசாலையில் அனுமதி

இந்தியாவில் ஆந்திரா விசாகப்பட்டினத்தில் உள்ள LG Polymers நிறுவனத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் திடீரென விச வாயு (Poisonous Gas) கசிவு ஏற்பட்டதால் இரண்டு முதியவர்கள் மற்றும் ஒரு 8 வயது சிறுமி உட்பட 8 பேர் இதுவரை இறந்துள்ளனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை நடந்துள்ளது.

மேலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் 5000 க்கும் மேற்பட்டோர் சுவாசப்பிரச்சினையால் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பலர் இன்னும் தெருக்களில் மயக்கத்தில் கிடக்கின்றனர் மற்றும் பலர் கண் எரிச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தவுடன், உள்ளூர் பொலிஸார் சம்பவ இடத்தை அடைந்து மக்களை வெளியேற்றத் தொடங்கினர். இரண்டு மணி நேரத்திற்குள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். சுவாசிப்பதில் சிக்கல் உள்ளவர்களுக்கு செயற்கைச் சுவாசம் வழங்கப்படுகிறது.

இச்சம்வத்தில் கால்நடைகளும் இறந்துள்ளதுடன் மயங்கி வீதிகளில் விழுந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்களில் சிலரை பரிசோதித்த மருத்துவர்கள், தொழிற்சாலையில் இருந்து வெளியான வாயு ‘ஸ்டைரீன்’ ஆக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். ஸ்டைரீன் என்பது எரியக்கூடிய திரவப் பொருள்களில் ஒன்று. கார்களின் கதவுகள், பைப்புகள், பிளாஸ்டிக் குவளைகள் உள்ளிட்ட கடினமான பிளாஸ்டிக் பாகங்கள் தயாரிப்பில் இந்த ஸ்டைரீன் பயன்பாடு அதிகம். இது போன்ற பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம்தான் எல்.ஜி.பொலிமர்ஸ் என தெரிவி்க்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir