பிரிட்டனில் கொரோனா இறப்புக்கள் குறைந்தன

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +346 இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது. கடந்த பலநாட்களாக 500களையும், 600களையும் கடந்து பதிவாகிய இறப்புகள், இரண்டாம் உலகப்போரின் வெற்றி நாளில் மிண்டும் சுமார் பாதியளவாக குறைந்திருக்கிறது. இந்த நிலையில்  பிரிட்டனின் மொத்த மரணங்கள்,  31,587  ஆக உயர்ந்துள்ளன. அத்துடன் புதிதாக அடையாளம் காணப்பட்ட +3,896  தொற்றாளர்களுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 215,260 ஆக  உயர்ந்துள்ளது.

இதேவேளை,  ஸ்பெயினில் 179 இறப்புகளும், ரஸ்யாவில் 104 இறப்புகளும்,  மறுபுறம்  மெக்ஸிக்கோவில் 199 இறப்புகளும்  பதிவாகி உள்ளன. ஆரம்பத்தில் அதிகளவிலான இழப்புகளை தாங்கிய இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தற்போது இறப்புகள் கட்டுப்பாட்டுள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அந்த நாடுகளில் எதிர்வரும் வாரங்களில் தளர்வுகளையும் மேற்கொள்ள உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir