ஈரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்!

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச விமான நிலையத்தில் பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அந்நாட்டு நேரப்படி இன்று (07) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஈரானின் மிக முக்கியமான உள்நாட்டு விமான நிலையமாகவும் கருதப்படும் இந்த மெஹ்ராபாத் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, அங்கு பல விமானங்கள் நின்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலையடுத்து அந்தப் பகுதியில் இருந்து பெரும் புகைமூட்டம் கிளம்பியுள்ளதுடன், அது தொடர்பான பல வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.

விமான நிலையத்தின் பல இடங்கள் எதிரிகளின் இலக்காகியுள்ளதை ஈரானிய அரச ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

இதற்கு முன்னர் கடந்த மார்ச் 4ஆம் திகதியும் இஸ்ரேல் இந்த விமான நிலையத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியிருந்தது.

அதன்போது ஹெலிகொப்டர் உற்பத்திப் பிரிவு உட்பட இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருந்த பல கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும், இன்றைய புதிய தாக்குதலில் விமான நிலையத்தின் எந்தப் பகுதிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply