பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (20) முற்பகல் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விடவும் குறைந்த விலையில் லங்கா சதொசவில் அரிசியைக் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சதொசவில் விலைக்கழிவு வழங்கப்படும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை விபரம் (ஒரு கிலோகிராம்):

வெள்ளை நாடு – ரூ. 217
வெள்ளைப்பச்சை அரிசி – ரூ. 203
கோதுமை மா – ரூ. 254
நெத்தலி – ரூ. 1,050
பருப்பு – ரூ. 264
பெரிய வெங்காயம் – ரூ. 150 – 160 இற்கு இடைப்பட்ட விலை

ஒவ்வொரு பொருளுக்கும் கொள்வனவு வரம்பு (Limit) விதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்தச் சலுகை நுகர்வோருக்கானதே அன்றி வியாபாரிகளுக்கானது அல்ல என்றும் தெரிவித்தார்.

இதேவேளை சதொசவில் 2,500 ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்களைக் கொள்வனவு செய்பவர்களுக்குப் பரிசில்களை வழங்கும் திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“2,500 ரூபாவிற்கும் அதிகமாகப் பொருட்களை வாங்கும் ஒவ்வொருவருக்கும் அதிர்ஷ்டலாபக் குலுக்கலுக்கான கூப்பன் ஒன்று வழங்கப்படும்.

எனவே சதொசவிற்கு வருபவர்கள் காரில் அல்லது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்ப வாய்ப்புள்ளது. 2,500 ரூபாவிற்கு மேல் பொருட்களை வாங்கி அதிர்ஷ்டசாலியாக மாறுங்கள்” என அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்திருந்தமை குரிசிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply