ஹம்பாந்தோட்டை பகுதியில் எரிபொருளை பதுக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது!

ஹம்பாந்தோட்டை, கட்டுவெவ சல்மல்யாய பகுதியில் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே அவரது வீட்டிற்குள் எரிபொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 480 லீற்றருக்கும் அதிகமான டீசல் மற்றும் சுமார் 20 லீற்றர் பெற்றோல் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

கைதான சந்தேகநபர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply