சமூக இடைவெளியைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் இருந்தால் அடுத்த மூன்று வாரங்களில் கொரோனா வைரஸ் உச்சமடையும். அப்போது நாட்டில் பொதுத்தேர்தலையும் நடத்த முடியாது; வேறு எதனையும் முன்னெடுக்க முடியாது.”
– இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பொதுத்தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு என்னால் தெரிவிக்கப்பட்டுள்ளமை உண்மையாகும். எனினும், தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தை வலுப்படுத்தாமலும், சாதாரண சூழலை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்காமலும், சமூக இடைவெளியைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமலும் இருந்தால் அடுத்த மூன்று வாரங்களில் கொரோனா வைரஸ் உச்சமடையும். அப்போது நாட்டில் பொதுத்தேர்தலையும் நடத்த முடியாது; வேறு எதனையும் முன்னெடுக்க முடியாது.
இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அரச தரப்பினர் மாத்திரமல்ல எதிர்த்தரப்பினர் உள்ளிட்ட அனைவரும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அரச ஊடக நேர்காணலில் மாத்திரமல்ல, தனியார் ஊடகத்துக்குச் சென்றாலும் இதனையே நான் வலியுறுத்துவேன்” – என்றார்.