யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்து வந்த பல வணிக நிலையங்களை முற்றுகையிட்ட பொலிஸார், பெருமளவிலான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய, நேற்று (12) இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கை சுற்றுலா இலங்கையில் அனுமதியின்றி இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் யாழ்ப்பாண பொலிஸார் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இலங்கைக்குள் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளைப் பார்ப்பதோ அல்லது அதற்காகப் பணம் செலுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக சன் டைரக்ட், வீடியோகான், டாடா பிளே, டிஷ் டிவி போன்ற சேவைகள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
