சுனில் ரத்நாயக்கவுக்கு மன்னிப்பு வழங்கியது அநீதியான செயல் அல்ல ; ஜனாதிபதி

வழக்கு விசாரணைகள் இன்றி 14 ஆயிரத்து 500 விடுதலைப் புலிகளுக்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ள நிலையில், சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு மன்னிப்பு வழங்கியது அநீதியான செயல் அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டமை தொடர்பான இந்தியாவில் வெளியாகும் இந்து பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்று தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவத்தினருக்கு எதிராக போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த இடமளிக்க போவதில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தில் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய சுனில் ரத்நாயக்கவக்கு மன்னிப்பு வழங்கினேன்.

இராணுவ தளபதிக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்துவது அநீதியானது.இந்து பத்திரிகை விடுதலைப் புலிகளை கெரில்லா அமைப்பு எனக் கூறியிருந்தாலும் அந்த ஒரு பயங்கரவாத அமைப்பு.

வன்னி இராணுவ நடவடிக்கையின் போது 40 ஆயிரம் பேர் கொல்லப்படடுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும் அது ஒரு கணிப்பு மாத்திரமே எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir