இலங்கையில் கொரோனா நெருக்கடி, இன்னும் 100 சதவீதம் சாதாரண நிலைக்கு வராத காரணத்தால், பாடசாலைகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் இன்னும் பிற்போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு, தபால் மூலம் இலவசக் கல்வியை கற்றுக்கொடுக்குமாறு, கல்வித்துறை கல்விசாரா ஊழியர் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கல்வித்துறை கல்விசாரா ஊழியர் சங்கத்தினரால், கண்டி, அலவத்துகொடையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அதில் உரையாற்றிய சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே. திலகரத்ன, இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக, இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிப்பதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது , இருந்த போதிலும், தற்போதைய நிலையில், பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை இல்லை என்று தெரியவருகின்றது என்றும் அவர் கூறினார்.
வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அநேகமானோர் கொவிட் – 19 பாதிப்புக்கு உள்ளான நிலையிலேயே உள்ளனர் என்றும் எனவே, வைரஸ் தொற்று முற்றாக நீங்கும் வரை, பாடசாலைகளை ஆரம்பிப்பதை பின் போட்டு மாணவர்களுக்கு தபால் மூலம் கல்வியை கற்றுக் கொடுக்குமாறு தாங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார்.