ஒரேநாளில் 40 பேருக்கு கொரோனா

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 40 பேரில் 32 பேர் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் என்பதுடன், 7 பேர் கடற் படை உறுப்பினர்கள் என்பதோடு, மற்றைய நபர் கடற்படை உறுப்பினர் ஒருவரின் உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 849 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 84 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் நேற்று 12 பேர் குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், இலங்கையில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இலங்கையில் இதுவரை 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்பத குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir