புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன
இன்று மாலை 4 மணியளவில் கல்வியங்காடு புதிய செம்மணி வீதிச் சந்தியில் இருந்து மே தினப் பேரணி ஆரம்பமாகி, நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நிறைவுற்று பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
ரணில் அரசாங்கத்தில் விலைவாசிகள் தொடர்பாகவும், உழைக்கும் மக்களை அரசாங்கம் சுரண்டுகிறது, விவசாயத்தினை கூண்டோடு அழிக்கிறது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு பேரணி இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மாக்சிச லெனினிசக் கட்சியின் செயலாளர் சி.கா.செந்திவேல், உறுப்பினர் செல்வம் கதிர்காமநாதன், சட்டத்தரணி த.தேவராஜ் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மே தினத்தைக் கொண்டாட முடியாது நாட்டை வாங்கு ரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள் ரணில் விக்கிரமசிங்கவும் அவரின் மூதாதைகளும் என்று கட்சியின் செயலாளர் சி.க.செந்திவேல் தனது உரையில் குறிப்பிட்டார்.
எங்கும் இல்லாத வகையில் அரிசி, முட்டை போன்றவற்றையே இறக்குமதி செய்கின்ற அரசாங்கமாக ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் காணப்படுகிறது, என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.