வரி அறவீடுகளை மீண்டும் மீண்டும் அதிகரிப்பதற்குப் பதிலாக வரி தளத்தை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சியம்பலாபிட்டிய, எதிர்காலத்தில் வரி விகிதங்களைப் படிப்படியாகக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டு, இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளைப் பரிசோதித்த பின்னரே சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதலீட்டுச் சபையால் (BOI) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றினால், இயந்திரங்களை இறக்குமதி செய்வதாகக் கூறி ஏறக்குறைய 556,000 சிகரெட்டுக்கள் கடத்தப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுக்கள் ஏறக்குறைய 85 மில்லியன் பெறுமதியுடையது எனவும், தற்போது கொடவத்தையில் உள்ள சுங்கக் கொள்கலன் முனையத்தில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
T01