குமுதினிப் படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று

குமுதினிப் படகில் படுகொலை செய்யப்பட்ட 36 பேரின் நினைவாக 38 ஆம் ஆண்டு நினைவேந்தலானது, இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நெடுந்தீவு இறங்குதுறையிலுள்ள நினைவாலய வளாகத்தில் இடம்பெற்றது.

காலை 8.15 மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலயத்தில் ஆத்ம சாந்திவேண்டி திருப்பலியும், அதேநேரத்தில் மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள வீரபத்திர பிள்ளையார் ஆலயத்தில் ஆத்ம சாந்தி வேண்டி சிறப்புபூசையும் இடம் பெற்றன.

இதனைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் குமுதினிப் படுகொலை நினைவேந்தலானது, குழுமத்தின் நெடுந்தீவு பிரதேச தலைவர் வி.ருத்திரன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில், நினைவுத்தூபிக்கான நினைவுச் சுடர் ஏற்றல் மற்றும் மலர் அஞ்சலி செலுத்துதல் ஆகிய நிகழ்வுகளுடன் பசுந்தீவு ருத்திரனின் குருதியின் குமுறல்கள் என்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டது.

குறித்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுகளில் நெடுந்தீவுப் பகுதி மதத்தலைவர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவுத் துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் பயணித்த குமுதினிப் படகு பயணித்துக் கொண்டிருந்த வேளை இலங்கைக் கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 36 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தdர்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply