வாட்ஸ்அப் (WhatsApp) இல் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்அப்பில் (WhatsApp) பயனர்களின் தனி உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சாட் லொக் (chat log) என்ற புதிய அம்சத்தை மெட்டா (meta) நிறுவனத்தின் தலைவர் mark zuckerberg அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதன்மூலம், பயனர்களின் அனுமதி இல்லாமல் வெளி நபர்கள் யாரேனும் வாட்ஸ்அப்பைத் திறந்து பார்த்தாலும் லொக் செய்து வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட chat இனை அவர்களால் காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மறைத்துவைக்கப்பட்டுள்ள Chat மூலமாகப் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை தொலைபேசியில் உள்ள Gallery இல் தானாக சேமிக்கப்படாது எனவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வசதி தற்போது பீட்டா (Beta) பதிப்பாகவே பயனாளர்களுக்கு  வழங்கப்படுவதாகவும், விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் புதிய அப்டேட் (Update) வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply