கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) மியான்மரைத் தாக்கிய மோச்சா சூறாவளியில் சிக்கி ஏறக்குறைய 40 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மோச்சா சூறாவளி இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட வலிமையான புயல்களில் ஒன்றாகும் எனவும், சுமார் 209kmh (130mph) வேகத்தில் காற்று வீசியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெரும்பாலான உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் மியான்மாரின் ரக்கைன், மத்திய மியான்மர், சாகிங் மக்வே பிராந்தியங்களில; சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சூறாவளியின் தாக்கத்தால், நூற்றுக்கணக்கான வீடுகளும் தங்குமிடங்களும் இடிந்து விழுந்துள்ளதாகவும், நாட்டில் தகவல் தொடர்புகளை மேற்கொள்வதற்குக் கடினமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சூறாவளியில் சிக்கிய மக்கள் பலரைக் காணவில்லை எனவும், இதனால் இறப்புக்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
சூறாவளியின் தாக்கத்தால் மியான்மரில் வீதிப் போக்குவரத்து நடவடிக்கைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
T01