இத்தாலியின் வடக்கு எமிலியா-ரோமக்னா பகுதியில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் சிலர் ஹெலிகொப்டர் மூலம் கூரைகளிலிருந்து மீட்கப்பட்டனர்.
14 ஆறுகள் கரை உடைந்து 23 நகரங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கும் அதேவேளை, ரவென்னாவின் மேயர் தனது நகரம் இப்போது அடையாளம் காணமுடியாது உள்ளதாகவும், ரொமாக்னாவின் வரலாற்றில் இது மிகவும் மோசமான இரவு, ரவென்னாவுக்கு ஏற்பட்ட சேதத்தை அளவிடமுடியாது, எனவும் கவலையுடன் கூறியுள்ளார்.
இந்த வார இறுதியில் நடைபெறவிருந்த எமிலியா-ரோமக்னா F1 கிராண்ட் பிரிக்ஸ் போட்டி, வெள்ள அனர்த்தம் காரணமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இமோலாவில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு இடையே நேற்று புதன்கிழமை நடைபெற்ற கலந்தாலோசனைகளில் போட்டியை நடத்த முடியாது என்ற முடிவுஎடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் எதிர்வரும் நாட்களிலும் இப்பகுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
T04