இலங்கைக்கு இரண்டாவது தவணைக் கடனை வழங்க, நான்கு விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.
தேசிய மற்றும் சர்வதேசக் கடன் மறுசீரமைப்பு, மத்திய வங்கியைச் சுயாதீனமாக்கும் சட்டமூலம், அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல் மற்றும் அரசச் செலவு ஆகிய நான்கு விடயங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆய்வு செய்கின்றது.
இம்மாதம் 11 ஆம் திகதியிலிருந்து 23 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் விசேட நிபுணர்கள் அடங்கிய குழு குறித்த ஆய்வைத் தொடங்கியுள்ளது.
T02