அரசுக்குச் சொந்தமான இரண்டு உர நிறுவனங்களால், விவசாயிகளுக்கு விற்கப்படும் 50 கிலோகிராம் யூரியா உர மூட்டையின் விலையானது எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி முதல் 9,000 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
இன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலின்போது, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால், யூரியாவின் விலையை குறைப்பது தொடர்பான குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 31,500 மெட்ரிக் தொன் யூரியா நாட்டுக்கு வர உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதைத் தொடர்ந்தும், உலக சந்தையில் யூரியாவின் விலை வீழ்ச்சியடைந்து வருவதைத் தொடர்ந்தும், அதன் அனுகூலத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
T01