இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை சூரிய சக்தி அதிகார சபைக்கு தென்கொரியா 5.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தென் கொரிய வர்த்தகம், தொழில்துறை மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கொரிய தொழிநுட்பத்திற்கான நிறுவன அபிவிருத்தி அரை-அரசு அமைப்பானது குறித்த பங்களிப்பைச் செய்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சும், தொழில்நுட்ப அபிவிருத்திக்கான தென்கொரிய நிறுவனமும் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் சப்ரகமுவ மாகாணத்தில் சந்திரிகா வெவாவிலும் ஊவா மாகாணத்தில் கிரி இப்பன் வெவாவிலும் தலா ஒரு மெகாவாட்ஸ் திறன் கொண்ட இரண்டு மிதக்கும் சூரிய மின் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும், அடுத்த வருடம் டிசெம்பர் மாதத்திற்குள் இத்திட்டம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
T02