இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC)தமது எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்சம் 50 சதவீத கையிருப்பை பராமரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
குறைந்தபட்ச சேமிப்பு அளவை பராமரிக்காத மற்றும் CPC விதிமுறைகளுக்கு இணங்காத எரிபொருள் நிலையங்களின் உரிமத்தை மறுபரிசீலனை செய்து இடைநிறுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை இந்தியன் எண்ணெய் நிறுவனம் போதுமான கையிருப்புகளை பராமரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் CPC தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருள் உயர்வை எதிர்பார்த்து சில நிலைய உரிமையாளர்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முன்வராதமையால் கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் வரிசைகள் காணப்பட்டதுடன்; பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கையிருப்பு தீர்ந்துவிட்டது என்ற அறிவிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
T02