சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்றுவரும் மோதல் காரணமாக, சிறுவர் இல்லங்களில் தங்கியிருக்கும் 60 குழந்தைகள் உணவுத் தட்டுப்பாட்டாலும், உடல் நலக் குறைவாலும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைகளுக்கும் இடையே இரண்டு மாதங்களாகத் தொடர்ந்தும் மோதல் நடைபெற்றுவரும் நிலையில், மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு உலக நாடுகள் வலியுறுத்துகின்றன.
இந்நிலையில், சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள சிறுவர் இல்லத்தில் கடந்த ஆறு வாரங்களில் 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த வாரத்தில்; இரண்டு நாட்களில் மட்டும் 26 குழந்தைகள் இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.