உலகிலேயே அதிகமாக சூழல் மாசுக்குள்ளாகிய நகரம், நியூயார்க் என ஆய்வுகள் முடிவுகள் தெரிவிக்கின்றன.
கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் விளைவாகப் பரவும் புகையினால் நியூயார்க் நகரம் மாசுக்குள்ளாவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலகிலேயே மிக மோசமான காற்று மாசு இந்தியாவின் டெல்லியிலும், ஈராக்கின் பாக்தாத்திலும் ஏற்படுவதாகக் கருதப்படும் நிலையில், நியூயார்க் நகரில் காற்று மாசு அவற்றை விட மிக மோசமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தூசு மற்றும் புகை மூட்டங்கள் நியூயோர்க் நகரில் அதிகளவில் பரவுவதால், நகர மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.