பிலிப்பைன்ஸ் நாட்டின் மாயோன் எரிமலை வெடிப்பிலிருந்து நச்சுவாயு மற்றும் புகை வெளியேறி வருவதால் அருகில் வசிக்கும் 13,000 மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் மத்திய மாகாணமான அல்பேயில் உள்ள மயோன் மலையிலிருந்து சூடான பாறைகள் விழுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இனிவரும் நாட்களில் எரிமலை வெடிப்பு தீவிரமடையும் பட்சத்தில் மேலும் அதிகமான மக்கள் வெளியேற்றப்படலாம் என நாட்டின் தலைமை எரிமலை நிபுணர் தெரசிட்டோ பேகோல்கோல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, எரிமலை வெடிப்புகளுக்கு விடப்படும் உச்சபட்ச எச்சரிக்கையான 5ம் நிலையில் தற்போது 3 ஆவது படி நிலை எச்சரிக்கையை அரசு அறிவித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.