யுனெஸ்கோவில் மீண்டும் இணையும் அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபையின், கலாசார மற்றும் அறிவியல் நிறுவனமான யுனெஸ்கோவில் மீண்டும் இணைவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

குறித்த தீர்மானம் கடந்த திங்களன்று மேற்கொள்ளப்பட்டது.

யுனெஸ்கோ கொள்கை வகுப்பில், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான தரநிலைகளை அமைப்பதில், அமெரிக்கா விட்டுச் சென்ற இடைவெளியைச் சீனா நிரப்புகிறது என்ற கவலையை அடுத்து, யுனெஸ்கோவில் மீண்டும் இணைவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலாண்மை மற்றும் வளங்களுக்கான அமெரிக்க துணைச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா, மீண்டும் இணைவதற்கான திட்டத்தை முறைப்படுத்தும் கடிதத்தை யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலேயிடம் கடந்த வாரம் சமர்ப்பித்தார்.

இந்த முடிவு ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புக்கு ஒரு பெரிய நிதிப் பங்களிப்பை வழங்குவதாக உள்ளது.

யுனெஸ்கோவிற்கான சீனாவின் தூதர் ஜின் யாங், அமெரிக்காவை மீண்டும் கொண்டு வர யுனெஸ்கோ மேற்கொண்ட முயற்சிகளுக்கு தனது நாட்டின் சார்பாக பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

2011 இல் பாலஸ்தீனத்தை ஒரு உறுப்பு நாடாக சேர்க்க வாக்களித்த பின்னர், அமெரிக்காவும் இஸ்ரேலும் யுனெஸ்கோவிற்கு நிதியுதவி செய்வதை நிறுத்தியது. மேலும் இஸ்ரேலுக்கு எதிரான சார்பு மற்றும் நிர்வாக சிக்கல்களை மேற்கோள் காட்டி அடுத்த ஆண்டு முழுவதுமாக யுனெஸ்கோவிலிருந்து விலக டிரம்ப் நிர்வாகம் 2017 இல் முடிவு செய்தது.

இத்திட்டத்தின் கீழ், அமெரிக்க அரசாங்கம் தனது 2023 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையான 600 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஹோலோகாஸ்ட் கல்வி, உக்ரைனில் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், பத்திரிகையாளர் பாதுகாப்பு மற்றும் ஆப்பிரிக்காவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆகியவற்றிற்காக 10 மில்லியன் டொலர்கள் நன்கொடையையும் வழங்கும் எனவும்   கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply