மீண்டும் குறைகிறது பேருந்து கட்டணம்!

இலங்கையில் பேருந்துக் கட்டணம் மேலும் குறைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் உட்பட அனைத்து பேருந்து கட்டணங்களையும் 20 வீதத்தால் குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கொள்கையின் பிரகாரம், ஜூலை 1 ஆம் திகதி பேருந்து கட்டணத்தை குறைக்கும் பொறுப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், 12 பிரிவுகள் தொடர்பான கணக்கீடுகளை ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாகவும் போக்குவரத்து அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் விலை, வாகன உதிரிப்பாகங்களின் விலை, டயர் மற்றும் பட்டரி உள்ளிட்ட 12 வகை பொருட்களுக்கு விலை அதிகரித்திருந்தது.
அதன் காரணமாக கடந்த கொவிட் காலகட்டத்தில் பயணிகளை இருக்கைகளில் மட்டுமே ஏற்றிச் செல்லும் சட்டத்தின் கீழ் 20 வீதம் பேருந்துக் கட்டணத்துடன் கூடுதலாக ஒரு சதவீதம் அதிகரிக்கப்பட்டது.
ஆனாலும் இதுவரை 10 வீதம் குறைக்கப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.
இதன்படி தற்போதைய குறைந்தபட்ச கட்டணமான 30 ரூபா உட்பட அனைத்து கட்டணங்களையும் குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply