சீனாவில் அதிகரித்துள்ள வேலையின்மை வீதம்!

சீனாவில் 16-24 வயதுக்குட்பட்டவர்களுக்கான வேலையின்மை வீதம் ஏப்ரல் மாதத்தில் 20.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என அந்நாட்டு உத்தியோக பூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

1.6 மில்லியன் மாணவர்கள் கல்லூரி மற்றும் தொழிற்கல்வி பள்ளிகளில் இருந்து பட்டம் பெற்று தொழிற் சந்தையில் நுழைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இந்த  புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சீன அரசாங்கத்தின் கொரோனாக் கொள்கையின் கீழ், சீனா தொழிற்சாலைகளுக்கு தடை விதித்துள்ளமையால் பிற நாடுகளின் கட்டுப்பாட்டு கொள்கைகளை விட பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது என வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் நான்சி கியான் கபார்ஹப் தெரிவித்துள்ளார்.

செய்தி அறிக்கையின்படி, அண்மைய காலத்தில் சீனாவின் பொருளாதார மீட்சி மற்றவர்களை விட பின்தங்கியுள்ளது எனவும் தெரதிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இளைஞர்களின் வேலைவாய்ப்பு வீதம் 2020 இல் 14.85 சதவீதத்தை எட்டியது, 2021 இல் 9.57 சதவீதமாகக் குறைந்தது.

அமெரிக்காவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு வீதம் தற்போது 6.5 சதவீதமாக உள்ளது.

சீனாவில் தொற்றுநோய் தொடர்பான பெரும்பாலான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சீனாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு வீதத்தை குறைப்பதற்கான அடிப்படை நிலைமைகள் மேம்படவில்லை.

இளைஞர்களின் வேலையின்மை வாழ்நாள் வருவாயைக் குறைக்கிறது என்பதையும் இளைஞர்கள் திறன்களை வளர்ப்பதற்கான முக்கியமான வாய்ப்புகளை இழக்கிறார்கள் என்பதையும் ஆய்வுகள் காண்பிக்கின்றன.

இடஒதுக்கீடு, ஊதிய வீதத்திற்கு இடையே உள்ள பெரிய இடைவெளி, இளம் பட்டதாரிகள் நிறுவனங்கள் கொடுக்கத் தயாராக இருக்கும் சம்பளத்தை ஏற்கத் தயாராக உள்ளமை, பொருத்தமற்ற சம்பள வளர்ச்சி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பனவும் தாக்கம் செலுத்துகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டில், ஒருதேசிய ஆய்வில், சீனக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்களில் சுமார் 30சதவீதம் பேர் தங்கள் பெற்றோருடன் தொடர்ந்து வாழ்ந்து வருவதாக செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

எவ்வாறாயினும், தற்போது, சீனாவுக்கு அதிக வேலைகள் மட்டுமின்றி அதிக சம்பளம் தரும் வேலைகளும் அவசியமாகியுள்ளன.

சீனப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகின்ற போதும் முதியோரைத் தக்கவைக்க, அதிக உற்பத்தித்திறன் கொண்ட தொழிலாளர்களின் புதிய கூட்டமைப்புக்கள் அவசரமாகத் தேவைப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply