அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் நகரத்தின் வழியாக வீசிய சூறாவளியால், பல மாகாணங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
நேற்று, உள்ளூர் நேரப்படி 5.00 மணியளவில் சூறாவளி தாக்கியதாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.
குறித்த சூறாவளியால் பாதிக்கப்பட்டு இறப்புக்கள் சம்பவித்துள்ளதாகவும், இறப்புக்களின் எண்ணிக்கையை கணக்கிடமுடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சூறாவளியின் தாக்கத்திற்குட்பட்டு, தகவல் தொடர்பு கோபுரங்களும், வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சூறாவளியின் தாக்கத்திற்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக அவசரகால குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சூறாவளியினால் பாதிக்கப்பட்ட 75 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சூறாவளித் தாக்கத்தையடுத்து, குறித்த பகுதிகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.