ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட நிவாரணம் மற்றும் அபிவிருத்தி அமைப்பான Americares, 3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு பெறுமதிவாய்ந்த மருந்துகளையும் மருத்துவப் பொருட்களையும் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கை தூதரகத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கையின் பேரில், தூதுவர் மகிந்த சமரசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் குறித்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
ஜுன் 8 ஆம் திகதி கொழும்பிற்கு வந்து சேர்ந்த கப்பலில் பக்டீரியா தொற்றுக்கு பயன்படுத்தப்படும் அமோக்ஸிசிலின், ஒவ்வாமை மூக்கின் அறிகுறிகளுக்கான புளூட்டிகசோன் ப்ரோபியோனேட், பெரும் மனச்சோர்வுக் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் மிர்டாசபைன், உயர் இரத்த அழுத்தத்திற்குப் பயன்படுத்தப்படும் லேபெடலோல் மற்றும் ஓல்மெசார்டன் போன்ற அவசர மருந்துகளே இவ்வாறு இலங்கை சுகாதார அமைச்சினால் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நன்கொடைக்காக அமெரிக்கர்களுக்கு நன்றி கூறிய தூதுவர் சமரசிங்க, இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து குடும்பங்களினதும் ஆரோக்கியத்தை எந்த விலையுமின்றி மேம்படுத்துவதற்காக குறித்த மருந்துகள் உடனடியாகப் பயன்பாட்டிற்கு வரும் எனவும் உறுதியளித்துள்ளார்.
T02